Cinema
‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாகிறாரா எஸ்.ஜே.சூர்யா? - அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் - போனிகபூர் - எச்.வினோத் கூட்டணி வலிமை படத்துக்காக அமைந்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வலிமை படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதால் அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் என்றும், அவர் தயார் ஆனதும் படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இப்படத்தில் வடிவேலு, நஸ்ரியா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. மெர்சலுக்கு பிறகு வடிவேலு எந்தப் படத்திலும் கமிட்டாகாததால் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதாக வந்த செய்தி ரசிகர்களை உற்சாகமாக்கியது.
ஆனால், கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிப்பது உறுதியானதால் ‘வலிமை’ படத்தில் வடிவேலு நடிக்கவில்லை என தகவல் வெளியானது. அதேபோல் நஸ்ரியா தரப்பிலிருந்தும் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என தகவல் வெளியானதை மறுத்துள்ள அவர், என்னிடம் இது தொடர்பாக யாரும் பேசவில்லை. அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமாக இருந்திருந்தால் என்னிடம் பேசுவார்கள் என எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தாங்கள் நடிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் வலிமை படம் தொடர்பாக எந்த அப்டேட்டும் வராததால் அஜித் ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே, டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும் படத்தை அடுத்த ஆண்டு மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியிடத் திட்டமிட்ட படக்குழு ‘விஜய் 64’ வெளியாக இருப்பதால் படத்தின் ரிலீஸை தீபாவளிக்கு ஒத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !