Cinema
அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வடிவேலு நடிக்கிறாரா இல்லையா? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!
‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது அஜித் - போனிகபூர் - எச்.வினோத் கூட்டணி. படத்திற்கான பூஜைகள் அண்மையில் நடந்து முடிந்து படத்துக்கு ‘வலிமை’ என்ற டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
வலிமை படத்தில் அஜித் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால் அதற்காக உடலமைப்புக்காக அவர் தயாராகி வருகிறார் என படக்குழு தெரிவித்திருந்தது. இதற்கிடையில், நடிகர், நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வலிமை படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் உலவி வருகின்றன. அஜித்தும் வடிவேலுவும் இணைந்து நடித்து கடைசியாக வெளியான படம் ராஜா. அந்தப் படத்தின் போது இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தும், வடிவேலுவும் இணைந்து நடிப்பதாக வந்த தகவல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருந்தது. மேலும், வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில், வலிமை படத்தில் வடிவேலு நடிப்பது தொடர்பான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இயக்குநர் எச்.வினோத் எப்போதும் வித்தியாசமான கூட்டணியை வைக்கவே விரும்புவார். அது வலிமை படத்திலும் தொடரும். ஆகையால், நடிகர் நடிகைகள் தொடர்பாக படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், நவம்பர் 24ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில், படக்குழு சார்பில் எப்போது ஷூட்டிங் தொடங்கும் என எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !