Cinema
18 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் நடிக்கிறாரா வடிவேலு? - ‘வலிமை’ பட லேட்டஸ்ட் அப்டேட்!
‘நேர்கொண்ட பார்வை’ படம் வெற்றியடைந்ததை அடுத்து அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்துக்காக இணைந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற நவம்பர் 24ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியானது.
இதற்கிடையில், வலிமை படத்தின் அஜித்தின் கதாபாத்திரம் போலிஸ் என்பதால் அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.
மேலும், படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் ஷூட்டிங் தொடங்கும்போது வெளியிடப்படும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.
முன்னதாக எழில் இயக்கத்தில் அஜித்தும் வடிவேலுவும் இணைந்து ‘ராஜா’ படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்ததாக கூறப்பட்டது.
தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு, வலிமை படத்தில் அஜித்தும் வடிவேலும் இணைந்து நடிக்க இருப்பதாக வந்த செய்தி இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!