Cinema
நவ., 24ல் தொடங்குகிறதா அஜித்தின் ‘வலிமை’ ஷூட்டிங்? - போனி கபூர் வெளியிட்ட தகவல்!
நேர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித்தின் அடுத்த படமாக உருவாக இருக்கிறது ‘வலிமை’. எச்.வினோத் இயக்கவிருக்கும் இந்த படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரே தயாரிக்க உள்ளார்.
படத்தின் பூஜையன்றே டைட்டிலும் அறிவிக்கப்பட்டது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், படத்தில் அஜித் போலிஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பது, வெகு நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா வலிமை படத்துக்கு இசையமைக்க இருப்பதும் கூடுதல் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பர் 24ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், படபிடிப்பில் அஜித் எப்போது கலந்துகொள்வார் என்பது குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் போனிகபூர், “வலிமை படத்துக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகிறார். எனவே அவர் தயாரானதும் ஷூட்டிங் பணிகள் தொடங்கப்படும்” என கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல், இதுவரை வந்த படங்களில் சால்ட் & பெப்பர் லுக்கில் வந்த அஜித் வலிமை படத்தில் போலிஸ் கதாபாத்திரத்தில், அதற்கேற்றவாறு ஹீரோயினையும் போலிஸ் கதாபாத்திரத்திலேயெ அமைக்க திட்டமிட்டுள்ளனராம். ஆகையால் ஹீரோயின் தேடும் படலமும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்காக கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர், நயன்தாரா, த்ரிஷா என பல முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த நஸ்ரியாவும் வலிமை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், நடிகை நஸ்ரியா அஜித்தின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!