Cinema
விஜய் 64 : டெல்லி படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல் - திட்டமிட்டபடி மே மாதம் ரிலீஸ் ஆகுமா ?
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பிகில்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிப்பதை தயாரிப்பு நிறுவனமான XP கிரியேட்டர்ஸ் அறிவித்திருந்தது.
மேலும் ஆண்ட்ரியா, யுடியூப் தொடரில் நடித்து வரும் ப்ரிகிதா என்பவரும் விஜய் 64ல் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
40 நாட்கள் டெல்லியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு படப்பிடிப்பை நடத்த பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஏற்பட்டுள்ள மூடுபனி மற்றும் காற்றுமாசு காரணமாக படப்பிடிப்பு நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் குறைவான நேரத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும், விஜய் சேதுபதி இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இப்படம் 2020ம் ஆண்டு கோடைகால விடுமுறையையொட்டி வெளியாகும் எனப்படக்குழு அறிவித்திருந்தது. டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு முழுமையாக குறைந்த பின்னரே படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படம் சொன்ன தேதிக்கு வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!