Cinema
’இந்த சூழலில் டெல்லியில் வாழ்வது எப்படி ?’ - ட்விட்டரில் கொந்தளித்த பிரியங்கா சோப்ரா
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா, “ஒயிட் டைகர் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட் செய்யவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்களிடம் காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி இருக்கிறது. ஆனால், வீடு இல்லாதவர் நிலை எப்படி இருக்கும்?. அவர்களுக்காக பிராத்தனை செய்யவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் என்பதால் டெல்லி குறித்த அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!