Cinema
‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் இதுவா? - தொடர்கிறதா சிவாவின் ‘V’ சென்டிமென்ட்?
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது படம் உருவாக இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்துக்கான நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் சிறுத்தை சிவாவும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
சிவாவின் குடும்ப சென்டிமென்ட் படங்களில் ரஜினி 168ம் இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு கதாநாயகிகள் கொண்ட படமாக உருவாக உள்ளதால் ஜோதிகா, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, முதன்முறையாக நடிகர் ரஜினியுடன் இணைந்து சூரி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் இதுவரை வெளிவந்த 4 படங்களின் தலைப்பும் ‘V’ எழுத்தைக் கொண்டே அமைந்திருக்கும்.
அதுபோல ரஜினி 168லும் சிவாவின் ’V’ சென்டிமென்ட் தொடரும் வகையில் படத்துக்கு ’வியூகம்’ என பெயரிடப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் பட டைட்டில் மட்டுமல்லாமல் ரஜினி 168 குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியிடாமல் உள்ளது. வருகிற டிசம்பரில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் ரஜினி 168 படம் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Also Read
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!