Cinema
பிகில் படத்தால் கேரளாவில் நடிகர் ப்ருத்திவிராஜுக்கு சிக்கல்!
நடப்பு ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்.,25ம் தேதி வெளியான படம் பிகில். இது நடிகர் விஜய்க்கு 63வது படமாகும்.
தெறி, மெர்சலுக்கு பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா என பலர் நடித்துள்ளனர்.
படம் வெளியான முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு வசூல் செய்துள்ளது பிகில் படம். ஆனாலும், விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் இன்னும் 50 கோடிக்கு மேல் வசூலித்தால் மட்டுமே லாபம் கிட்டும் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் நடிகர் விஜய்க்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனால் விதியை மீறி 200 தியேட்டர்களில் பிகில் படம் திரையிடப்பட்டது.
இது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வேற்று மொழிப்படங்களை கேராளவில் 125 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யக் கூடாது என்பது விதியாகும்.
ஆனால் விதியை பின்பற்றாததால் பிகில் பட கேரள உரிமையை பெற்றிருந்த நடிகர் ப்ருத்திவிராஜ் மற்றும் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துக்கு கேரள விநியோகஸ்தர்கள் சங்கம் அபராதமாக வசூலில் ஒரு தொகையை கட்ட உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு கட்டாவிடில் இருவரது படங்களையும் திரையிட தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read
-
உருவாகிறது புயல் : எப்போது?.. எங்கே?... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பா?
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!