Cinema
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?
பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ரஜினி போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், தர்பார் பட ஷூட்டிங்கிற்கு இடையில், ரஜினியிடம் ஏ.ஆர். முருகதாஸ் மற்றொரு கதையை சொல்லியிருக்கிறார். இது ரஜினிக்கு பிடித்துப்போக, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!