Cinema
’பாலை வனச் சோலைகள்’ உள்ளிட்ட ஹிட் படங்களின் இயக்குநர் மற்றும் நடிகர் ராஜசேகர் காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று காலை காலமானார்.
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980ல் வெளியான நிழல்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜசேகர். அந்த படத்தில் வைரமுத்துவின் கைவண்ணத்தில் உருவான “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் மூலம் பிரபலமானவர் ராஜசேகர்.
அதன் பிறகு தனது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம், தூரத்துப் பச்சை, கல்யாணக் காலம், தூரம் அதிகமில்லை போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் இரட்டை இயக்குநராக ராஜசேகர் வலம் வந்தார்.
இதனையடுத்து இயக்குநர் வேலைக்கு ஓய்வு கொடுத்த ராஜசேகர் நடிப்பில் கவனம் செலுத்தினார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பும் வகித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
திடீரென இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் ராஜசேகர் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தியைக் கேட்டு திரைத்துறையினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?