Cinema
விஜய் 64 : விஜய்க்கு வில்லனாகும் மலையாள இளம் ஹீரோ!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜய்யின் 63-வது படமான ‘பிகில்’ படத்தின் பணிகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் 64 படத்தை இயக்கவிருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தோணி வர்கீஸ் மலையாளத்தில் நடித்த அங்கமாலி டைரிஸ் வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது
Also Read
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!
-
பா.ஜ.கவில் இருந்து விலகிய முக்கிய தலைவர் : புதுச்சேரி அரசியல் வட்டத்தில் பரபரப்பு!