Cinema
நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா ? : சர்ச்சைக்கு பதிலளித்த கணவர் போனி கபூர் !
நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஹோட்டலில் உள்ள குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மதுபோதையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது.
ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லை, இது கொலை தான் என்று அப்பொழுது பேச்சு எழுந்தது. இந்நிலையில், முன்னாள் கேரள காவல்துறை ஆலோசகரும், தடயவியல் மருத்துவ பேராசிரியருமான டாக்டர் உமாதாதன் குறித்து கேரள டி.ஜி.பி ரிஷிராஜ் மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் சில சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
அந்த கட்டுரையில், என் நண்பரும், தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் பேசம் போது, “ ஒரு அடி ஆழ நீரில் யாரும் மூழ்கி இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்துக் கொண்டு தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும்” என உமாநாதன் கூறியதாக அந்த கட்டுரையில் ரிஷிராஜ் கூறியுள்ளார்.
முன்னாள் கேரள காவல்துறையின் ஆலோசகர் நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து இவ்வாறு கூறியிருப்பது மக்களிடையே நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது தானா என்ற கேள்வி மக்களிடேயே எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!