Cinema
டைட்டில், வில்லன் என அப்டேட்களை தெறிக்கவிடும் ‘விஜய் 63’ டீம்!
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘விஜய் 63’. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
மேலும், ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய் 63 படத்தில் நடிக்கின்றனர்.
பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தின் முக்கியமான பகுதியாக மிகப்பெரிய ஃபுட்பால் மைதானம் போன்ற செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வீல் சேரில் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதற்கிடையில், விஜய் 63 படத்துக்கான வில்லன் கதாபாத்திரத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஷாருக்கான் இந்த படத்தில் நடிப்பது குறித்து உறுதியாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இந்த படத்தின் க்ளைமாக்ஸில் 15 நிமிடங்கள் மட்டுமே ஷாருக்கான் வர இருப்பதாகவும், படத்தின் இந்தி பட உரிமையை அவர் ஊதியமாகப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்துக்கான டைட்டிலாக மைக்கேல், கேப்டன் மைக்கேல், வெறி, வெறித்தனம் என 4 பெயர்களை நடிகர் விஜய்க்கு பரிந்துரைத்திருப்பதாகவும், படத்துக்கான தலைப்பை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!