Cinema
பாலிவுட்டில் அறிமுகமாகும் அஜித் பட இயக்குநர்!
தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம், ஆரம்பம், யட்சன் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தனது அடுத்த படத்தை இயக்க துவங்கிவிட்டார். ஆனால் இந்த முறை இந்தி படம் இயக்குகிறார் விஷ்ணுவர்தன். கார்கில் போரில் வீர மரணமடைந்த விக்ரம் பத்ராவின் பயோபிக் தான் அந்தப் படம். `சேர்ஷா’ (Shershaah) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஷ்ணுவர்தன்.
இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா, க்யாரா அத்வானி நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 70 நாட்கள் சண்டிகர், காஷ்மீர், லடாக் மற்றும் பலம்பூர் ஆகிய பகுதிகளில் நடக்க இருக்கிறது. கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 2020ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Also Read
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! : வடகிழக்கு பருவமழை குறித்து நேரில் ஆய்வு!
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!