Cinema
நடிகர் தனுஷுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார்.
ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார்.இந்த படத்தில், தெருக்களில் மந்திரக் கலைஞர் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்தியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் சண்ட் ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்' படமும் திரையிடப்பட்டது.
சிறந்த நகைச்சுவை திரைப்படத்துக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. ஏற்கெனவே இந்தியாவில் தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!