Cinema
உறுதியானது ‘காஞ்சனா 4’... 3D தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகிறது!
நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளியான ‘முனி’ படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2 என வரிசையாக ஹாரர், த்ரில்லர் ஜானர்களில் படம் எடுத்திருந்தார்.
இதன் சீரிஸில் ‘காஞ்சனா 3’ சமீபத்தில் வெளியாக ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. காமெடி, சீரியஸ், த்ரில்லர் என பல வகைகளில் கமர்ஷியல் ஹிட் ஆனதால், தமிழ், தெலுங்கு என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன காஞ்சனா சீரிஸ் திரைப்படங்கள்.
இந்த வரிசையில் ‘காஞ்சனா 4’ படத்தை எடுப்பதற்காக கமிட்டாகி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா 4’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் இது 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், காஞ்சனா 3 படத்தின் வெற்றியானதால் அது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் நடிக்க, லாரன்ஸ் இயக்குகிறார். இந்தி ரீமேக் வேலைகள் முடிவடைந்த பின்னர் ‘காஞ்சனா 4’ படத்தின் வேலைகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!