Cinema
‘நேர்கொண்ட பார்வை’ அஜித்தின் நடிப்பில் மிரண்டு போன போனிகபூர்
நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளைப் பார்த்து விட்டு போனிகபூர் தன் கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “ நேர்கொண்ட பார்வை படத்தின் ஒருசில காட்சிகளைப் பார்த்தேன். அஜித் நடிப்பில் மிரட்டியுள்ளார். மேலும் அஜித், கண்டிப்பாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டும் அதுவே என் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த டிவீட்டை அஜித் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.
Also Read
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!