Cinema
சின்னத்திரை நடிகையுடன் மீண்டும் ஜோடி சேரும் நடிகர் வைபவ்
பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று ‘தெய்வமகள்’. இந்தத் தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தவர் நடிகை வானி போஜன். இந்த ஒரே சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.
தற்போது இவருக்கு வைபவ்வுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இவர் நடிகர் வைபவ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார்.ஏற்கனவே ஜெய் நடிப்பில் வெளியான ‘ஜருகண்டி படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். இது இவர் தயாரிப்பில் வெளியான முதல் படம்.
வானி போஜனுக்கு முன்பு சின்னத்திரையிலிருந்து வந்தவர்தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவரும் முதன் முறையாக வைபவ்வுக்கு ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தப் படத்தின் இயக்குனர் யார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற விவரம் இன்றும் வெளியாவில்லை.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!