உலகம்

தங்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் - கத்தார் பிரதமர் அறிவிப்பு !

தங்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் - கத்தார் பிரதமர் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.

மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

தங்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் - கத்தார் பிரதமர் அறிவிப்பு !

இந்த போரின் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் யாகியா சின்வார், இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

அந்த வகையில் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் வான் வழியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க கத்தாருக்கு முழு உரிமை உண்டு என்றும், இந்த தாக்குதலை எதிர்த்து கடுமையான நடவடிக்கையை கத்தார் எடுக்கும் என்றும் அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரபு நாடுகளும் கூட்டாக இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories