உலகம்

காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் ? - ஹமாஸின் பதில் என்ன ?

காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் ? - ஹமாஸின் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் ? - ஹமாஸின் பதில் என்ன ?

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின்படி, காசா மக்களை தெற்கு பகுதிக்கு இடம்பெயர வைத்து, வடக்கு காசாவை முழுவதுமாக காலவரையின்றி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசின் இந்த திட்டத்துக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இனியும் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஹமாஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories