உலகம்

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு : டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு : டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

பின்னர் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

தற்போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தேர்வு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது, 2006 ஆம் ஆண்டு டொனால் டிரம்பும் நானும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தோம் என்று நடிகை ஸ்டார்மி டேனியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த புகார் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு இடையூறாக அமைந்தது.

மேலும் இக்குற்றச்சாட்டு தனக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று நினைத்த டொனால்ட் டிரம்ப், தனது வழக்கறிஞர் மூலம் நடிகைக்கு ரூ.1 கோடிக்கு பணம் வழங்கியுள்ளார். இந்த பணத்தை தேர்தல் செலவுகளில் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலியாக செலவு கணக்குகளை காட்டியதாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனதால் ஜூலை 11-ல் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கே டொனால்ட் டிரம்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories