உலகம்

உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்யும் ரஷ்யா : உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு !

கார்கிவ் பகுதியில் உள்ள பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்யும் ரஷ்யா : உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு !
VADIM GHIRDA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. எனினும் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்யும் ரஷ்யா : உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு !

இந்த நிலையில் கார்கிவ் பகுதியில் உள்ள பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரை ரஷ்யா முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நகரை சுற்றியுள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இங்குள்ள பொதுமக்களை கைதியாக பிடித்து ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரைன் கூறியுள்ளது. இது குறித்து உக்ரைன் தரப்பில் வெளியான அறிக்கையில், "வாவ்சான்ஸ்க் நகரில் பொதுமக்களை ரஷ்யா கைதியாக பிடித்துவைத்துள்ளது. அங்குள்ள மக்களை வெளியேற அனுமதிக்காமல் சுரங்கப் பகுதிகளில் ரஷ்யா அடைத்து வைக்கிறது.

உக்ரைனின் பொதுமக்களை நோக்கி ரஷ்ய ராணுவம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் உத்தரவை ஏற்காத பொதுமக்களை ரஷ்யா படையினா் சுட்டுக்கொல்கின்றனா். இது மிகப் பெரிய போா்க் குற்றம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories