உலகம்

உருகிய வெனிசுலாவின் கடைசி பனிப்பாறை : பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை !

வெனிசுலாவின் மலைகளில் உள்ள கடைசி பனிப்பாறையும் உருகியுள்ளது.

உருகிய வெனிசுலாவின் கடைசி பனிப்பாறை : பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் வாயுக்களால் புவி மண்டலத்தின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் கடும் வெப்ப அலை வீசியது.

இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதோடு துருவப்பகுதிகளில் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருகிறது. பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகி வருவதால் கடல் மட்டம் அதிகரிப்பதால் கடற்கரையோர நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்தும் நிலவி வருகிறது.அதுமட்டுமின்றி இமயமலை உள்ளிட்ட பனி அடர்ந்த மலைகளிலும் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகிறது.

உருகிய வெனிசுலாவின் கடைசி பனிப்பாறை : பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை !

அந்த வகையில் தற்போது வெனிசுலாவின் சியரா நெவாடா டி மெரிடா மலைகளில் உள்ள கடைசி பனிபாறையும் உருகியுள்ளது. தென்னமெரிக்க நாடான வெனிசுலாவின் சியரா நெவாடா டி மெரிடா மலைகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 மீட்டர் உயரமான சிகரங்கள் அமைந்துள்ளது.

இங்கு மொத்தம் 6 பனிப்பாறைகள் இருந்த நிலையில் அதில் ஐந்து பனிப்பாறைகள் கடந்த 2011-க்கு முன்பாகவே உருகிவிட்டன . தொடர்ந்து மிச்சம் இருந்த லா கொரோனா பனிப்பாறையும் தொடர்ந்து உருகி வந்த நிலையில், தற்போது அது 450 ஹெக்டேர் என்ற பரப்பளவில் இருந்து 2 ஹெக்டேருக்கு உருகி உள்ளது.

10 ஹெக்டேர் என்ற அளவில் இருந்தால் மட்டுமே பனிப்பாறை என்ற அடையாளம் வழங்கப்படும் என்பதால் லா கொரோனாவுக்கு பனிப்பாறை அந்தஸ்த்தி நீக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பனிப்பாறையும் விரைவில் உருகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories