உலகம்

6 மாதங்களுக்கு பிறகு படைகளை திரும்பப்பெற்ற இஸ்ரேல்: 2 படைப்பிரிவுகள் காசாவில் இருக்கும் என்று அறிவிப்பு !

தெற்கு காசாவில் இருந்த பெரும்பாலான இஸ்ரேலிய படைகள் திரும்பபெறப்பட்டுள்ளன.

6 மாதங்களுக்கு பிறகு படைகளை திரும்பப்பெற்ற இஸ்ரேல்: 2 படைப்பிரிவுகள் காசாவில் இருக்கும் என்று அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு படைகளை திரும்பப்பெற்ற இஸ்ரேல்: 2 படைப்பிரிவுகள் காசாவில் இருக்கும் என்று அறிவிப்பு !

இந்த நிலையில், தெற்கு காசாவில் இருந்த பெரும்பாலான இஸ்ரேலிய படைகள் திரும்பபெறப்பட்டுள்ளன. காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கு காசாவை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேலிய படைகள் தெற்கு காசாவில் போரினை தொடர்ந்து நடத்தி வந்தன.

ஆனால், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்ததோடு, ஐ.நா சபையிலும் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள படைகளை இஸ்ரேல் அரசு திரும்பப்பெற்றுள்ளது. அதே நேரம் வடக்கு காசாவை நோக்கி மீண்டும் ஹமாஸ் அமைப்பினர் வருவதைத் தடுக்க கான் யூனிஸ் நகரில் இரண்டு படைப்பிரிவுகள் நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. 6 மாதங்கள் போர் தொடர்ந்து தீவிரத்தன்மையை அடைந்த நிலையில், தற்போது போர் பதற்றம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories