உலகம்

Glyoxylic Acid: Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரில் ரத்த கசிவு - மருத்துவர்கள் எச்சரிக்கை!

Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், Hair Straightening-ஐ பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Glyoxylic Acid: Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரில் ரத்த கசிவு - மருத்துவர்கள் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பெண்கள் தங்கள் முடியை அழகாக காட்டுவதற்கு பல விஷயங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் Hair Straightening. பார்லர் சென்று, குறிப்பிட்ட கெமிக்கல் மூலம் இதனை செய்துகொண்டால், முடி வழுவழுவென பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் என்று சில பெண்களின் நம்பிக்கை. எனவே அதனை பலரும் ஆர்வமாக செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் Hair Straightening செய்ய ஆசைப்பட்டு, கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகளாக Hair Straightening செய்து வந்துள்ளார். அந்த பெண் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறையும், அந்த பெண் Hair Straightening செய்யும்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, முதுகு வலி என உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது தலையில் எரிச்சலுடன் சேர்ந்து புண் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Glyoxylic Acid: Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரில் ரத்த கசிவு - மருத்துவர்கள் எச்சரிக்கை!

அப்போது அவரது இரத்தத்தில் கிரியாட்டினின் என்ற புரதம் அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவரது சிறுநீரில் இரத்தம் கலந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து அவருக்கு வெவ்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறுநீரகத்தில் நோய்த்தொற்றோ, வேறு எதுவுமோ இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்தே இதற்கு காரணம் குறித்து மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் விசாரிக்கையில், தான் Hair Straightening செய்த பிறகு தான் தனக்கு இவ்வாறு நடந்ததாகவும், Hair Straightening செய்யும்போது அதில் க்ளைஆக்ஸிலிக் என்ற அமிலம் (Glyoxylic acid) கலந்த க்ரீம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்தே அதுதான் காரணமாக இருக்குமோ என்று மருத்துவர்கள் சோதனை செய்ய எண்ணியுள்ளனர்.

Glyoxylic Acid: Hair Straightening செய்த இளம்பெண்ணுக்கு சிறுநீரில் ரத்த கசிவு - மருத்துவர்கள் எச்சரிக்கை!

அதன்படி அந்த Glyoxylic acid-ஐ ஒரு எலி மேல் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த ரசாயனமானது தோலின் மூலம் உறிஞ்சப்பட்டு, சிறுநீரகத்துக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்தே பார்லரில் Hair Straightening வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் Hair Straightening முறையில் இந்த இரசாயனத்தை தடை செய்ய வேண்டும் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியல் இணைப் பேராசிரியரான மருத்துவர் ஜோஷுவா வலியுறுத்தியுள்ளார்.

முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்காகப் பூசப்படும் க்ரீமில் முக்கிய இரசாயனங்களின் ஒன்றான Glycolic acid-ஐ பயன்படுத்தும்போது, தலைமுடியில் உள்ள வேர்க்கால்களின் மூலம், உள்ளே சென்று Glyoxylic acid ஆக மாறும். அவ்வாறு மாறும் அந்த அமிலமானது, இரத்தத்தில் கலந்து, கல்லீரல் வழியாக சீறுநீரிலும் கலக்கும். அவ்வாறு சிறுநீரகத்துக்குச் செல்லும்போது இந்த அமிலம், உடலுக்கு சில நேரங்களில் தீங்கு விளைவிக்கின்றன.

எனவே இனி பெண்கள் யாரேனும் முடியை Hair Straightening செய்ய எண்ணினால், மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்றும், Glyoxylic acid அமிலத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories