உலகம்

எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர் : உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜெஃப் பெசோஸ்!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர் : உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜெஃப் பெசோஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவனம் தான் டெஸ்லா. அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முக்கிய இடம் வகித்து வருகிறது.

பிற நிறுவனங்கள் பெட்ரோலிய வாகனங்கள் உருவாக்குவதில் மும்முரமாக இருந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தியை தொடங்கி இப்போது அந்த துறையில் பிற நிறுவனங்கள் தொடமுடியாத உச்சத்தில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது. அதுமட்டுமின்றி எலான் மஸ்கை உலகப்பணக்காரர் ஆகியதில் டெஸ்லா நிறுவனத்துக்கு முக்கிய பங்குண்டு.

அதனைத் தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா எனர்ஜி, நியூராலின்க், போரிங் போன்ற நிறுவனங்களை தொடங்கினார். இதன் மூலம் உலகபணக்காரர்களில் நம்பர் 1 -ஆகா எலான் மஸ்க் மாறினார். தொடர்ந்து பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தையும் எலான் மஸ்க் கையகப்படுத்தினார். மேலும், அதன் பெயரையும் எக்ஸ் என மாற்றினார்.

எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர் : உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜெஃப் பெசோஸ்!

ஆனால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதன் காரணமாக எலான் மஸ்க்க்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், உலகபணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல் இடத்தை தற்போது இழந்துள்ளார். கடந்த மார்ச் 4ம் தேதி அன்று டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்தன. இதன் காரணமாக எலான் மஸ்க்குக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இதன் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதலாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு $197.7 பில்லியன் டாலராகவும், ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு $200.3 பில்லியன் டாலராகவும் உள்ளது என்பது கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories