உலகம்

அமெரிக்கா : ஒற்றை ஆளாக போட்டியிட்டும் நோட்டோவுடன் தோல்வியைத் தழுவிய குடியரசு கட்சி வேட்பாளர் !

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் டிரம்ப்பின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா : ஒற்றை ஆளாக போட்டியிட்டும் நோட்டோவுடன் தோல்வியைத் தழுவிய குடியரசு கட்சி வேட்பாளர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் மீண்டும் போட்டியிடப்போவதாக குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கப் போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது. அதே போல குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் நிக்கி ஹாலே ஆகியோரும் களமிறங்கினர்.

அமெரிக்கா : ஒற்றை ஆளாக போட்டியிட்டும் நோட்டோவுடன் தோல்வியைத் தழுவிய குடியரசு கட்சி வேட்பாளர் !

இதில் விவேக் ராமசாமிக்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், அவர் இந்த போட்டியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து நிக்கி ஹாலே களத்தில் இருந்த நிலையில், அவர் நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது .

நெவாடா மாநிலத்தில், குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டில் நீதிமன்ற உத்தரவு காரணமாக ட்ரம்பின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் நிக்கி ஹாலே பெயர் மட்டுமே இருந்தது. இதனால் அங்கு நிக்கி ஹாலே வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த தேர்தலில் நிக்கி ஹாலேவுக்கு ஆதரவாக 39 சதவீத வாக்குகள் மட்டுமே விழுந்தது. 61 சதவீத வாக்குகள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறித்தும் நோட்டாவுக்கு பதிவானது. இதனால் நிக்கி ஹாலே தோல்வியைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் டிரம்ப்பின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories