உலகம்

தைவானைத் தனிநாடாகக் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படும் - சீனா எச்சரிக்கை !

தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வில்லியம் லாய் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தைவானைத் தனிநாடாகக் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படும் - சீனா எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.

ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.

தைவானைத் தனிநாடாகக் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படும் - சீனா எச்சரிக்கை !

இந்த நிலையில், தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வில்லியம் லாய் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் 24 பில்லியன் தைவான் மக்கள் வாக்கு செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதே போல தைவானில் புதிய அதிபர் சீனாவுக்கு எதிரானவர் எனக் கூறப்படுவதால் அந்த பிராந்தியத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தைவானில் நடைபெற்ற தேர்தல் குறித்து அறிக்கை வெளியிட்ட சீன அரசு, "தைவானைத் தனிநாடாகக் கருதி, சீனாவை விடுத்து சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்படும். சீன மக்களும், சீன ராணுவம் முழு நேரமும் அதிக விழிப்புடன் செயல்பட்டு, தைவானின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்று கூறப்பட்டிருந்தது.

banner

Related Stories

Related Stories