உலகம்

"கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளவில்லை"- கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து !

ஊழியர்களை பசிநீக்கம் செய்தது மோசமான முடிவாக இருந்தது என கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

"கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளவில்லை"- கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது.சில சிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஐ.டி நிறுவனங்கள் மட்டுமல்லாது முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாகக் கருதப்படும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளது. ஃபேஸ்புக் தங்களது ஊழியர்களை 11000 பேரை நீக்குவதாக அறிவித்தது. ட்விட்டர் தங்களது ஊழியர்களின் 50%க்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் 12000 பேரை பணிநீக்கம் செய்தது.

"கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளவில்லை"- கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து !

இந்த நிலையில், ஊழியர்களை பசிநீக்கம் செய்தது மோசமான முடிவாக இருந்தது என கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார். பணிநீக்கம் நடைபெற்று ஒரு வருடங்கள் ஆன நிலையில், இது குறித்து சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

பணிநீக்க நடவடிக்கைகளை கூகுள் "நிறுவனம் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும். எந்தவொரு நிறுவனத்திற்கும் பணிநீக்கம் செய்வது என்பது கடினமான சூழலாகதான் இருக்கும் . கடந்த 25 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு தருணத்தை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதனை எதிர்கொண்டுள்ளோம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணிக் கணக்குகளுக்கான அணுகலை உடனடியாகத் துண்டித்தது மிகக் கடினமான முடிவு. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாங்கள் செயல்படவில்லை என்றால், அது ஒரு மோசமான முடிவாக இருக்கும் என்பது தெளிவானது" என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories