உலகம்

'உங்களுக்கு பிடித்தவரை தேர்வு செய்யுங்கள்' - தென்கொரிய அரசே நடத்தும் Blind Dating : காரணம் என்ன?

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென்கொரிய அரசே Blind Dating என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

'உங்களுக்கு பிடித்தவரை தேர்வு செய்யுங்கள்' -  தென்கொரிய அரசே நடத்தும் Blind Dating : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்கொரிய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் திருமணங்கள் நடப்பது குறைந்துவிட்டதால் குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்துவிட்டது என்பதுதான்.

இப்படியே சென்றால் தென்கொரியாவில் மக்கள் தொகை கடுமையாகக் குறைந்துவிடும் என அந்நாட்டு அரசு அஞ்சி இதற்கு முடிவு கட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாகப் பிறக்கும் குழந்தையின் பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

'உங்களுக்கு பிடித்தவரை தேர்வு செய்யுங்கள்' -  தென்கொரிய அரசே நடத்தும் Blind Dating : காரணம் என்ன?

இந்த அறிவிப்பு வெளியான பிறகும் கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து Blind Dating என்ற நிகழ்ச்சியை அரசே நடத்தி வருகிறது. திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண்கள் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான இணையரைத் தேர்வு செய்து தங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு Blind Dating நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இளைஞர்கள் பலர் பங்கேற்று வருகிறார். இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசு நம்புகிறது. ஆனால் அதன் வெற்றி சில ஆண்டுகளுக்கு பிறகுதான் தெரியவரும். இருந்தாலும் Blind Dating நிகழ்வுக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories