உலகம்

காதலை முறித்து கொண்ட காதலி : ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் இத்தாலியில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில், காதலியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த காதலின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை முறித்து கொண்ட காதலி : ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் இத்தாலியில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (Giulia Cecchettin). 22 வயது இளம்பெண்ணான இவர், வினிடோ என்ற மாகாணத்தில் அமைந்துள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பிலிப்போ டுரிடோ (Filippo Turetta) (22) என்ற இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் பழக்கம் நாளடைவில் நட்பாக மாறி, பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் உறவில் நாளுக்கு நாள் ஏற்பட்ட சண்டை காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண், தனது காதலுடன் இருந்த காதலை முறித்து கொண்டுள்ளார். எனினும் அவரை சமாதான படுத்துவதற்காக பிலிப்போ பல வேலைகளை செய்து வந்துள்ளார். அப்படி இருந்தும் அவர் மனம் மாறாமல் இருந்துள்ளார்.

காதலை முறித்து கொண்ட காதலி : ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் இத்தாலியில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

இதனால் அவரை சமாதானப்படுத்துவதற்காக கடந்த வாரம், அந்த இளைஞர் தனது காதலியின் பட்டமளிப்புக்காக புது ஆடை வாங்குவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனை தனது சகோதரியிடம் கூறி, அந்த பெண்ணும் சென்றுள்ளார். ஆனால் அவ்வாறு சென்ற அந்த பெண், திரும்ப வீடு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த, அந்த பெண்ணின் சகோதரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிசிடிவி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து விசாரித்த நிலையில், 1 வாரத்திற்கு பிறகு அந்த பெண்ணின் உடல் ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு அருகில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து காதலனை தீவிரமாக தேடி வந்த போலீசார், அவரை ஜெர்மெனியில் வைத்து கைது செய்தனர்.

காதலை முறித்து கொண்ட காதலி : ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் இத்தாலியில் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணியில், தன்னுடன் இருந்த காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில், காதலியை தனியாக அழைத்து சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்து ஏரிக்கரையில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். இதனிடையே மீட்கப்பட்ட உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட காதலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories