உலகம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் : குஜராத் நபர்கள்தான் அதிகம் - வெளிவந்த அறிக்கை !

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் : குஜராத் நபர்கள்தான் அதிகம் - வெளிவந்த அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகில் வறுமை, போர், இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளின் மக்கள் வேறு நாடுகளுக்கு உயிர்பிழைக்க அகதிகளாக செல்கின்றனர். அதிலும் சமீப காலமாக இந்த அகதிகள் இடமாற்றம் அதிகரித்து வருகிறது.

பெரும்பாலும் அகதிகள் வளர்ந்த நாடுகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளை நோக்கியே தஞ்சம் தேடி செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளும் அகதிகள் பிரச்சனை காரணமாக கடுமையாக பாதிக்கப்படுறது.

அதோடு வசதியான வாழ்கைகாக இந்தியாவை சேர்ந்தவர்களும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழையமுயலும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு துறை வெளியிட்டி அறிக்கையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 96,917 இந்தியர்கள் : குஜராத் நபர்கள்தான் அதிகம் - வெளிவந்த அறிக்கை !

அதிலும், குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களே அதிக அளவு அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்வதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டில் 19,883 இந்தியர்கள் இவ்வாறு பிடிபட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு எல்லை தாண்டி நுழைபவர்களில் பலர் ஆபத்தான கனடா எல்லை வழியாக இந்த பகுதிக்குள் நுழைவதாகவும், இதனால் கடும் பனியில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories