உலகம்

"ஆப்கானியர்கள் வெளியேற கூடுதல் அவகாசம் தரவேண்டும்" - பாகிஸ்தான் அரசுக்கு தாலிபான்கள் கோரிக்கை !

பாகிஸ்தானை விட்டு வெளியேற ஆப்கானியர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும் தர வேண்டும் என தாலிபான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"ஆப்கானியர்கள் வெளியேற  கூடுதல் அவகாசம் தரவேண்டும்" - பாகிஸ்தான் அரசுக்கு தாலிபான்கள் கோரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதோடு தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தானுக்கெதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

"ஆப்கானியர்கள் வெளியேற  கூடுதல் அவகாசம் தரவேண்டும்" - பாகிஸ்தான் அரசுக்கு தாலிபான்கள் கோரிக்கை !

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக சட்டவிரோதமாக பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதன் காரணமாக ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், பல லட்சம் ஆப்கானியர்கள் இன்னும் வெளியேறாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானை விட்டு வெளியேற ஆப்கானியர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும் தர வேண்டும் என தாலிபான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தாலிபான் அரசு வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் காலத்தில் லட்சக்கணக்கான ஆப்கானியர்களுக்கு அடைக் கலம் கொடுத்த பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு நன்றி.பாகிஸ்தானை விட்டு வெளியேற யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. ஆப்கானியர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறாத ஆப்கானியர்களை தடுப்புக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories