உலகம்

ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்வோம்- அமெரிக்காவில் சீக்கிய மதத்தை சேர்ந்த நகர மேயருக்கு கொலை மிரட்டல்!

அமெரிக்காவில் நகர மேயராக இருக்கும் சீக்கிய மதத்தை சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்வோம்- அமெரிக்காவில் சீக்கிய மதத்தை சேர்ந்த நகர மேயருக்கு கொலை மிரட்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் கறுப்பினத்தவர்கள், சிறுபான்மையினர், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நகர மேயராக இருக்கும் சீக்கிய மதத்தை சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், ஹோபோகென் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது.

இந்த நகரத்தின் மேயராக சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரவிந்தர் எஸ் பல்லா பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2017ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று நகர மேயரானார். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு பதவியை விட்டு விலகக்கோரி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்வோம்- அமெரிக்காவில் சீக்கிய மதத்தை சேர்ந்த நகர மேயருக்கு கொலை மிரட்டல்!

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மேயர் ரவிந்தர் எஸ் பல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், முதலில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறி இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின்னர், பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவரையும், அவரின் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக இரண்டாவது முறை இமெயில் வந்துள்ளது. அதோடு நிற்காமல், கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மிரட்டல் விடுத்தவர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories