உலகம்

பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகே பெண் காவல் அதிகாரி பாலியல் வன்கொடுமை- 3 மாதத்தில் 2-வது முறை நடந்த அதிர்ச்சி !

பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகே பெண் காவல் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகே பெண் காவல் அதிகாரி பாலியல் வன்கொடுமை- 3 மாதத்தில் 2-வது முறை நடந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் ஈபிள் கோபுரமும் ஒன்று. இதனை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர். அந்த வகையில் அங்கு சுற்றுலா வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு கடந்த திங்கட்கிழமை 23 வயது பிரிட்டிஷ் பெண் காவல் அதிகாரி ஒருவர் தனது விடுமுறையை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அங்கு பாரிஸ் ஈபிள் கோபுரத்துக்கு சென்றவர், அங்குள்ள பூங்கா பகுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த கழிவறைக்கு அவர் சென்றபோது, ஒருவர் அவரின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி ஆள் இல்லாத இடத்துக்கு இழுத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றதும் கத்தி முனையில் அந்தக் பெண் காவல் அதிகாரியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாரிஸ் ஈபிள் கோபுரம் அருகே பெண் காவல் அதிகாரி பாலியல் வன்கொடுமை- 3 மாதத்தில் 2-வது முறை நடந்த அதிர்ச்சி !

பின்னர் அங்கிருந்து தப்பிய அந்த பெண் காவல் அதிகாரி, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலிஸார் 35 வயது ஆண் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .

இந்த சம்பவத்துக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்னர், அதே பூங்காவில் மெக்ஸிகோவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்களுக்குப் பிறகு அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories