உலகம்

இதயத்தை உலுக்கும் சம்பவம்.. உலகின் காரமான சிப்ஸ் சாப்பிட்ட 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

உலகின் மிகவும் காரமான சிப்ஸ் சாப்பிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதயத்தை உலுக்கும் சம்பவம்.. உலகின் காரமான சிப்ஸ் சாப்பிட்ட 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வந்த பிறகு ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்று சாவல் விடும் வீடியோக்கள் டிரெண்டாவது வழக்கமாகி விட்டது. தற்போது உலகம் முழுவதும் ஒன் சிப் சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது.

இந்த ஒன் சிப் சேலஞ்ச் என்பது உலகில் மிகவும் காரமான சிப்ஸ் என்று கருதப்படும் 'பாகுய்' என்ற சிப்ஸை சாப்பிட்டு அதை வீடியோ எடுத்துப் பதிவிட்டு நண்பர்கள் உள்ளிட்ட யாருக்காவது சாவில் விட வேண்டும். இப்படி பலரும் 'பாகுய்' சிப்ஸை சாப்பிட்டு வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு தங்களது நண்பர்களுக்குச் சாவில் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹாரிஸ் வாலேபா என்ற 14 வயது சிறுவனும் இந்த ஒன் சிப் சேலஞ்சில் பங்கேற்றுள்ளார்.மேலும் காரமான சிப்ஸை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டால் நாம் வைரலாகி விடுவோம் என்றும் நினைத்துள்ளார்.

இதயத்தை உலுக்கும் சம்பவம்.. உலகின் காரமான சிப்ஸ் சாப்பிட்ட 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

இதனால் பள்ளியில் 'பாகுய்' சிப்ஸை சாப்பிட்டுள்ளார். பின்னர் சில நிமிடத்திலேயே சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுத் துடித்துள்ளார். பிறகு ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இச்சம்பவம் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 'பாகுய்' சிப்ஸ் நாம் வழக்கமாகச் சாப்பிடும் காரத்தை விடப் பலமடக்கு அதிகம் இருக்கும். இந்த சிப்ஸை சாப்பிட்டால் மாரடைப்பு கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் ஆபத்தை உணராமல் பலரும் இந்த சிப்ஸை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories