உலகம்

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ட்ரோன்கள்.. எல்லை தாண்டி ரஷ்யாவை தாக்கிய உக்ரைன்.. பற்றியெரிந்த விமானங்கள் !

உக்ரைனின் ட்ரோன்கள் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ட்ரோன்கள்.. எல்லை தாண்டி ரஷ்யாவை தாக்கிய உக்ரைன்.. பற்றியெரிந்த விமானங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கியது. மேலும் நவீன ட்ரோன்களையும் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.

மேற்கத்திய நாடுகள் வழங்கிய ட்ரோன்கள்.. எல்லை தாண்டி ரஷ்யாவை தாக்கிய உக்ரைன்.. பற்றியெரிந்த விமானங்கள் !

சில நாட்களுக்கு முன்னர் உக்ரைனின் ட்ரோன்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே பாணியில் உக்ரைனின் ட்ரோன்கள் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று இரவு உக்ரைன் அனுப்பிய ட்ரோன்கள் ரஷ்யாவின் பாதுகாப்பை மீறி மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியிருக்கும் ஒரியோல், பிரையன்ஸ்க், ரியாசான், கலுகா ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது, மேலும், ப்ஸ்கோவ் விமான நிலையத்திலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் விமான நிலையத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதோடு நான்கு போக்குவரத்து விமானங்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து ரஷ்யாவின் விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னேற்பாடு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிலும், ப்ஸ்கோவ் பகுதியில் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் விமான நிலையத்தைத் தாக்கியிருக்கலாம் என ரஷ்யா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories