உலகம்

இந்தியாவின் சாதனையை விமர்சித்த பிரிட்டன் செய்தி வாசிப்பாளர்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.. நடந்தது என்ன ?

'சந்திரயான் 3' சாதனையை ஜீரணிக்கமுடியாமல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவின் சாதனையை விமர்சித்த பிரிட்டன் செய்தி வாசிப்பாளர்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.. நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் நேற்று முன்தினம் மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில்தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.

இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. அதே நேரம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் இந்த சாதனையை உலகின் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவின் சாதனையை விமர்சித்த பிரிட்டன் செய்தி வாசிப்பாளர்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்.. நடந்தது என்ன ?

இந்த நிலையில், இந்தியாவின் இத்தகைய சாதனையை ஜீரணிக்கமுடியாமல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவை பலரும் விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பேட்ரிக் கிறிஸ்டி என்பவர் அங்குள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று, சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த வீடியோவில் , “நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் இறங்கியதற்காக இந்தியாவை நான் வாழ்த்த விரும்புகிறேன். ஆனால், 2016 - 2021 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்திடம் இருந்து வாங்கிய 2. 3 பில்லியன் பவுண்டுகளை திருப்பி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால் அடுத்த ஆண்டு 57 மில்லியன் பவுண்டு பணத்தை நாங்கள் திருப்பி தர தயாராக இருக்கிறோம்.

விண்வெளி திட்டம் உள்ள நாடுகளுக்கு நாங்கள் இனிமேல் பணம் கொடுக்க மாட்டோம். விண்வெளி ஆராய்ச்சி செய்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்காக விண்கலத்தை அனுப்ப உங்களால் முடியும் என்றால், இனிமேல் உங்கள் தேவைக்காக நீங்கள் எங்களிடம் பணம் கேட்டு வரக் கூடாது. இந்தியாவில் 229 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். ஐக்கிய நாடுகள் கூற்றுப்படி, இது உலகில் எங்கும் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். வறுமையில் வாடும் இந்தியர்களுக்கு, அவர்களின் சொந்த அரசாங்கமே கவலைப்படாத போது நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories