உலகம்

இருசக்கர வாகனம் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. வீட்டின் பரம்பரை சொத்தை விற்ற 18 வயது சிறுவன்!

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்காகப் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டின் பரம்பரை சொத்தை 18 வயது சிறுவன் ஒருவன் விற்பனை செய்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனம் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. வீட்டின் பரம்பரை சொத்தை விற்ற 18 வயது சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவை சேர்ந்த 18 வயது சிறுவன் தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளான். ஆனால் சிறுவனின் பெற்றோர் வாங்கி தர மறுத்துள்ளனர்.

இதனால் சிறுவன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பரம்பரை சொத்தை விற்க முடிவு செய்துள்ளான். இதற்காக விற்பனை முகவர்களையும் அவர் அணுகியுள்ளார். அப்போது சிறுவனிடம் அவர்கள் ஆசையைத் தூண்டியுள்ளனர்.

பின்னர் அந்த சொத்தை சிறுவனிடம் இருந்து பாதி விலைக்கு விற்பனை முகவர்கள் வாங்கியுள்ளனர். இதை வாங்கிய அந்த முகவர் அதிக லாபத்திற்கு முற்றொரு முகவருக்கு விற்றுள்ளார்.

இருசக்கர வாகனம் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. வீட்டின் பரம்பரை சொத்தை விற்ற 18 வயது சிறுவன்!

இதையடுத்து இதுபற்றி சிறுவனின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் முகவர்களைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

பிறகு சிறுவனின் பெற்றோர்கள் நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுவனின் ஆசையைத் தூண்டி குறைந்த விலைக்குச் சொத்து விற்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் சிறுவனுக்குச் சொத்தை விற்பதற்கான அதிகாரம் இல்லாததால் அந்த ஒப்பந்தத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அந்த சொத்தை சிறுவனின் பெற்றோருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories