உலகம்

14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்.. 51 வயது நபர் கைது.. மதுவால் நேர்ந்த சோகம் !

இளம்பெண்ணை 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக அடைத்து வைத்திருந்த 51 வயதான நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்.. 51 வயது நபர் கைது.. மதுவால் நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யாவின் செல்யாபிஸ்க் பகுதியை சேர்ந்த விளாடிமிர் செஸ்கிடோ என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு 19 வயதான எகாடெரினா என்பவரை தனது வீட்டுக்கு மது அருந்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன் படி செஸ்கிடோவின் வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை தனது வீட்டில் செஸ்கிடோ அடைத்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் தொடர்ந்து அவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புருத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அதுவும் தொடர்ந்து 14 ஆண்டுகளாக அந்த பெண்ணை பாலியல் அடிமையாக வைத்திருந்துள்ளா.

14 வருடங்களுக்கு பின்னர் செஸ்கிடோவின் தாயார் உதவியுடன் அங்கு இருந்து தப்பிய அந்த பெண் பின்னர் காவல்நிலையத்தை அணுகி இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி அந்த பெண்ணை 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக அடைத்து வைத்திருந்த 51 வயதான விளாடிமிர் செஸ்கிடோவை போலிஸார் கைது செய்தனர்.

14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்.. 51 வயது நபர் கைது.. மதுவால் நேர்ந்த சோகம் !

விசாரணையில் செஸ்கிடா தன்னை 1000 முறைக்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். மேலும், கடந்த 2011 - ம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்ததாக செஸ்கிடோ மீது புகார் எழுந்து பின்னர் அதில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து செஸ்கிடா வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் விளையாட்டு பொம்மைகள், விலங்குகள், பாலியல் காட்சிகள் நிறைந்த சிடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories