உலகம்

தைவானுக்கு 345 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி.. அமெரிக்காவுக்கு பதிலடி தரப்படும் என சீனா எச்சரிக்கை !

தைவானுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத உதவிகளையும், 345 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவம் சார்ந்த உதவிகளையும் அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தைவானுக்கு 345 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி.. அமெரிக்காவுக்கு பதிலடி தரப்படும் என சீனா எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.

ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.

தைவானுக்கு 345 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி.. அமெரிக்காவுக்கு பதிலடி தரப்படும் என சீனா எச்சரிக்கை !

இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவின் மிக மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். அவர் வருகைக்கு சீனா கண்டும் கண்டனம் தெரிவித்தது. ஆனாலும் அதை மீறி அவர் தைவான் சென்றார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த தைவானை சுற்றி ஏவுகணைகளை நிறுத்திய சீனா அந்த பகுதியில் போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இது அந்த பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் ஒரு பகுதியாக, தைவானுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுத உதவிகளையும், 345 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவம் சார்ந்த உதவிகளையும் அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டேன் கீபை “ தென்சீன கடல் பிராந்தியத்தில் அமெரிக்கா பிரச்சனையை உருவாக்குகிறது. வானுடனான அனைத்து வகையான ராணுவ கூட்டுறவையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும். இது குறித்து அமெரிக்காவிடம் புகார் அளித்திருக்கிறோம். அமெரிக்கா தைவானை தவறான பாதைக்குக் கொண்டுசெல்கிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்கா எல்லை தாண்டக் கூடாது. அப்படி நிகழ்ந்தால் பதிலடி தரப்படும்” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories