உலகம்

இப்போது தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள்.. பைடன் VS டிரம்ப் மோதலின் அதிர்ச்சி கருத்து கணிப்பு முடிவுகள்!

அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போது நடந்தால் அதில் டிரம்ப்பே வெற்றிபெறுவார் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இப்போது தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள்.. பைடன் VS டிரம்ப் மோதலின் அதிர்ச்சி கருத்து கணிப்பு முடிவுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வருகிறது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இது தவறு வயது முதிர்வு காரணமாக பைடன் அடிக்கடி தடுமாறி விழுவது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இப்போது தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள்.. பைடன் VS டிரம்ப் மோதலின் அதிர்ச்சி கருத்து கணிப்பு முடிவுகள்!

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போது நடந்தால் அதில் டிரம்ப்பே வெற்றிபெறுவார் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஹார்வர்ட்-ஹாரிஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தற்போது பைடனும் டிரம்பும் தேர்தலை எதிர்கொண்டால் டிரம்ப் பைடனை விட 5% வாக்குகளை அதிகம் பெற்று வெற்றிபெறுவார் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல, கமலா ஹாரீஸ் டிரம்ப் போட்டியிட்டால் கமலா ஹாரீஸை விட டிரம்ப் 7% கூடுதல் வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் 68% பேர் பைடனுக்கு அதிக வயதாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories