உலகம்

திடீரென பண்ணையில் பற்றிய தீ.. 18 ஆயிரம் பசு மாடுகள் கருகிய பரிதாபம்.. ஆபத்தான கட்டத்தில் தொழிலாளி !

பால் பண்ணையில் திடீரென தீ பற்றி கொண்ட விபத்தில் 18 ஆயிரம் பசு மாடுகள் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பண்ணையில் பற்றிய தீ.. 18 ஆயிரம் பசு மாடுகள் கருகிய பரிதாபம்.. ஆபத்தான கட்டத்தில் தொழிலாளி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ளது சவுத் ஃபோர்க் என்ற பால் பண்ணை. இங்கு பல ஆயிரம் பசு மாடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த சூழலில் இங்கு கடந்த திங்கட்கிழமை மாலை நேரத்தில் திடீரென தீ பற்றியுள்ளார். முதலில் அதனை கவனிக்காத அங்கிருந்த ஊழியர் சிறிது நேரத்தில் கண்டுள்ளார்.

திடீரென பண்ணையில் பற்றிய தீ.. 18 ஆயிரம் பசு மாடுகள் கருகிய பரிதாபம்.. ஆபத்தான கட்டத்தில் தொழிலாளி !

அப்போது இந்த தீ மளமளவென வேகமாக சுற்றிலும் பரவியது. ஒட்டுமொத்தமாக பரவிய இந்த தீ அங்கிருந்த கொட்டகை முழுதும் பரவ தொடங்கி, அந்த பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த தீ விபத்தினால் மிரண்டு போன மாடுகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்தது. மேலும் அங்கு தொழிலாளி ஒருவரும் சிக்கி கொண்டார்.

திடீரென பண்ணையில் பற்றிய தீ.. 18 ஆயிரம் பசு மாடுகள் கருகிய பரிதாபம்.. ஆபத்தான கட்டத்தில் தொழிலாளி !

இந்த தீ புகை மிக வேகமாக பரவ, இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். நீண்ட மணி நேர முயற்சிக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மீட்பு படையினர். பின்னர் உள்ளே சென்று மாடுகளை பார்த்தபோது அங்கிருந்த மாடுகள் அனைத்தும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.

இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள ஊழியர் ஒருவரும் தீக்காயங்களுடன் மயக்க நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்ட மீட்பு குழு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில், பண்ணையில் இருந்த சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

திடீரென பண்ணையில் பற்றிய தீ.. 18 ஆயிரம் பசு மாடுகள் கருகிய பரிதாபம்.. ஆபத்தான கட்டத்தில் தொழிலாளி !

தொடர்ந்து இந்த தீ விபத்து எங்கிருந்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை அங்குள்ள பால் பண்ணையில் ஏற்பட்ட இதுபோல் விபத்தில் இதுவே அதிக உயிர் பலிகளை பெற்றுள்ள விபத்து என்று தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு நியூயார்க்கின் அப்ஸ்டேட் என்ற பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் , சுமார் 400 மாடுகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories