உலகம்

இனி பணக்காரர்களுக்கு தனி விலை, ஏழைகளுக்கு தனி விலை.. -பாகிஸ்தான் அறிவிப்பின் பின்னணி என்ன ?

எரிவாயு கையிருப்பு குறைந்து வருவதால் 24 மணி நேரமும் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் கூறியுள்ளார்.

இனி பணக்காரர்களுக்கு தனி விலை, ஏழைகளுக்கு தனி விலை.. -பாகிஸ்தான் அறிவிப்பின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

இனி பணக்காரர்களுக்கு தனி விலை, ஏழைகளுக்கு தனி விலை.. -பாகிஸ்தான் அறிவிப்பின் பின்னணி என்ன ?

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக வெகுவிரைவில் அந்த நாடு திவாலாகும் என கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகி விட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர அங்கு உணவு பொருளுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இனி பணக்காரர்களுக்கு தனி விலை, ஏழைகளுக்கு தனி விலை.. -பாகிஸ்தான் அறிவிப்பின் பின்னணி என்ன ?

இந்த நிலையில் எரிவாயு கையிருப்பு குறைந்து வருவதால் 24 மணி நேரமும் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் கூறியுள்ளார், இது தொடர்பாக பேசிய அவர், "நாட்டில் சமையல் எரிவாயு கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் மக்களுக்கு 24 மணி நேரமும் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது. அதெல்லாம் வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயுவுக்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். அதன்படி சமையல் எரிவாயு பணக்காரர்களுக்கு ஒரு விலையிலும், ஏழைகளுக்கு சலுகை விலையிலும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இனி பணக்காரர்களுக்கு தனி விலை, ஏழைகளுக்கு தனி விலை.. -பாகிஸ்தான் அறிவிப்பின் பின்னணி என்ன ?

ஆனால் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொழில்துறையினர் நாட்டின் வருவாயில் 68% பங்களிப்பு தரும் நிலையில், எரிவாயு விநியோகம் தடைபட்டால் பல தொழிற்சாலைகள் இயங்கவே முடியாது. இது நாட்டை பேரழிவுக்கு அழைத்துச்செல்லும் என கூறியுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தானில் ரேஷன் உணவை வாங்க பொதுமக்கள் முண்டியடித்து சென்றதால் நெரிசரில் மூச்சு திணறி பெண்கள், குழந்தைகள் என 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories