உலகம்

தடை செய்யப்பட்ட யுரேனியம் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் பிரிட்டன்.. அணுஆயுத போராக மாற வாய்ப்பு !

ரஷ்யாவின் டாங்குகளை வீழ்த்த வீரியம் குறைக்கப்பட்ட யுரேனியம் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட யுரேனியம் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் பிரிட்டன்.. அணுஆயுத போராக மாற வாய்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

தடை செய்யப்பட்ட யுரேனியம் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் பிரிட்டன்.. அணுஆயுத போராக மாற வாய்ப்பு !

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் டாங்குகளை வீழ்த்த வீரியம் குறைக்கப்பட்ட யுரேனியன் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவுடன் ஆதரவு அளித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட யுரேனியம் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் பிரிட்டன்.. அணுஆயுத போராக மாற வாய்ப்பு !

இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குறைக்கப்பட்ட யுரேனியத்திற்கும் அணு ஆயுதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், இது கதிரியக்கத் தன்மை கொண்டதல்ல எனவும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ள நிலையில், யுரேனியம் குண்டுகள் எங்கள் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது அணு ஆயுத போருக்கு வலுவகுக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

1991-ம் ஆண்டு வளைகுடா போரின் போது இந்த வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தற்போதும் யுரேனிய ஆயுதங்களின் நச்சுதாக்குதலுக்கு ஆளாகிவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பல்வேறு நாடுகளில் இந்தவகை ஆயுதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories