உலகம்

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !

ஈரானில் பெண்கள் பள்ளி செல்வதை தடுக்க சில கொடூரர்கள் விஷத்தை பரப்பியதாக அந்நாட்டு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முன்பெல்லாம் பெண்களால் கல்வி கற்கவே இயலாமல் இருந்தது. ஆண்களுக்கு கீழே பெண்கள் இருந்து வந்தார்கள்; ஆண்கள் தயவு இன்றி அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. வீடு, சமயலறையில் மட்டுமே அவர்கள் வாழ்வு என்று இருந்தது.

உலகம் முழுக்க இருந்த இந்த விஷயம் இந்தியாவில் ஒரு கட்டம் மேல் போய், உடன்கட்டை உள்ளிட்ட விஷயங்களும் இருந்தது. இதுபோன்ற கொடூரங்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒழிக்கப்பட்டது. இருப்பினும் சில பேரால் பெண்கள் கல்வி கற்க இயலாமல் இருந்த நிலையிலிலும், பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு உலகில் உள்ள பல பெண்கள் கல்வி கற்று பெரிய பெரிய பதவிகளில் இருந்து வருகின்றனர்.

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !

இருந்தபோதிலும், சில பிற்போக்குவாதிகள் பெண்கள் வெளியே செல்வதால்தான் குற்றங்கள் நிகழ்கிறது என்றும், அவர்கள் கல்வியும் கற்க கூடாது என்றும் கருத்து தெரிவித்தும், கண்டித்தும் வருகின்றனர். அதில் குறிப்பாக தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கான் நாடு. இங்கு பெண்கள் கல்வி கற்பதில் போதுமான சுதந்திரம் அந்நாட்டு அரசு வழங்கவில்லை.

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !

அந்த வகையில் ஈரான் நாட்டில் பெண்கள் கல்வி கற்பது பிடிக்காத சில மர்ம நபர்கள் அவர்களுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அதாவது கடந்த சில மாதங்களாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் தெற்கில் இருக்கும் கோம் நகரில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !

அதோடு அவர்கள் சுவாச பகுதியில் விஷம் பரவியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதில் சில மாணவிகள் கடுமயாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதோடு இந்த விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்போவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு துணை சுகாதாரத்துறை அமைச்சர் யூனஸ் பனாஹி, இந்த விஷத்தை சில மர்ம நபர்கள் வேண்டுமென்றே பரப்புவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "கோம் பள்ளிகளில் நூறுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் விசாரணை செய்ததில், குறிப்பிட்ட சிலர் அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாகப் பெண்கள் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அவர்களே திட்டமிட்டு விஷத்தை எப்படியோ பரப்பி வருகிறார்கள். அவர்கள் விரைவில் யார் என்று கண்டறியப்படுவார்கள்" என்றார்.

ஒன்றன் பின் ஒன்றாக சுருண்டு விழுந்த சிறுமிகள்.. ஈரானில் பள்ளி செல்வதை தடுக்க விஷத்தை பரப்பிய கொடூரர்கள் !

விஷத்தை வேண்டுமென்றே பரப்பி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க சில மர்ம நபர்கள் செய்யும் இந்த செயல் ஈரானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷத்தை வேண்டுமென்றே பரப்பி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க சில மர்ம நபர்கள் செய்யும் இந்த செயல் ஈரானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இணையவாசிகள் பலரும் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories