உலகம்

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்.. முற்றிலும் முடங்கிய 5 மாகாணங்கள்.. பருவநிலை மாற்றத்தின் அடுத்த சோகம் !

பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை ஆற்றல் மிக்க பனிப்புயல் ஒன்று தாக்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்.. முற்றிலும் முடங்கிய 5 மாகாணங்கள்.. பருவநிலை மாற்றத்தின் அடுத்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் கடும் வெப்ப அலை வீசியது.

இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்.. முற்றிலும் முடங்கிய 5 மாகாணங்கள்.. பருவநிலை மாற்றத்தின் அடுத்த சோகம் !

அதே நேரம் பல நாடுகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழியாத சூழலில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதோடு ஆப்ரிக்க காடுகளில் உள்ள விலங்குகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை ஆற்றல் மிக்க பனிப்புயல் ஒன்று தாக்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் 5 மாகாணங்களில் இயல்பு நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்.. முற்றிலும் முடங்கிய 5 மாகாணங்கள்.. பருவநிலை மாற்றத்தின் அடுத்த சோகம் !

குறிப்பாக மிச்சிகன், இலினாய், நியூ மெக்சிகோ, உள்ளிட்ட 5 பகுதிகள் பனிப்புயலால் முடங்கியுள்ளது. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சாலைகள் பனியால் மூடியுள்ளதல் பல இடங்களில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பனி காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய பனிப்புயல்.. முற்றிலும் முடங்கிய 5 மாகாணங்கள்.. பருவநிலை மாற்றத்தின் அடுத்த சோகம் !

இதன் காரணமாக மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிஸ், செயின்பால் ஆகிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனி காரணமாக 5 மாகாணங்களில் சுமார் 3,500 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வானிலை மையம் இந்த பனியின் தாக்கம் அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என கூறியுள்ளது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories