உலகம்

தலைவிரித்தாடும் பெட்ரோல் தட்டுப்பாடு.. குறையும் கையிருப்பு.. 3 வாரத்தில் திவாலாகிறதா பாகிஸ்தான் ?

பாகிஸ்தானில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்டும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

தலைவிரித்தாடும் பெட்ரோல் தட்டுப்பாடு..  குறையும் கையிருப்பு.. 3 வாரத்தில் திவாலாகிறதா பாகிஸ்தான் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

தலைவிரித்தாடும் பெட்ரோல் தட்டுப்பாடு..  குறையும் கையிருப்பு.. 3 வாரத்தில் திவாலாகிறதா பாகிஸ்தான் ?

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால் ஏற்படும் முதல் பாதிப்பான எரிபொருள் பற்றாக்குறையை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

தலைவிரித்தாடும் பெட்ரோல் தட்டுப்பாடு..  குறையும் கையிருப்பு.. 3 வாரத்தில் திவாலாகிறதா பாகிஸ்தான் ?

கராச்சி, லாகூர், பைசலாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் நீண்டும் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. பல்வேறு பெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில் தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யமுடியாமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாறு மறுத்துள்ளது.

தலைவிரித்தாடும் பெட்ரோல் தட்டுப்பாடு..  குறையும் கையிருப்பு.. 3 வாரத்தில் திவாலாகிறதா பாகிஸ்தான் ?

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் முசாதிக் மாலிக், "அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் தற்போது கையிருப்பில் இருக்கிறது. தற்போதைய இந்த பெட்ரோல் பற்றாக்குறைக்கு காரணம் டீலர்கள்தான், அவர்கள் பெட்ரோலை பதுக்கிவைத்து லாபம் பார்க்கிறார்கள்" எனவும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு மூன்று வாரத்துக்கு மட்டுமே வரும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது சரிவை சந்தித்தால் இலங்கை நிலைக்கு பாகிஸ்தான் செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது. அந்த நிலை வராமல் தடுக்க ஐஎம்எஃப் நிதியுதவியை நம்பியே பாகிஸ்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories