உலகம்

“அமெரிக்காவின் மாகாண ஆளுநராக முதல் இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு” - யார் இந்த அருணா மில்லர் ?

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றுக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அமெரிக்காவின் மாகாண ஆளுநராக முதல் இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு” - யார் இந்த அருணா மில்லர் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்றுக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் ஹைதராப் அருகே பிறந்தவர் அருணா மில்லர். தனது 7 வயதில் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குச் சென்று அங்கு படிப்பை மேற்கொண்டார்.

பல்வேறு துறைகளில் சாதனையை எட்டிய அருணா மில்லர் தற்போது தனது 58வது வயதில் அமெரிக்காவில் நடைபெற்ற மேரிலேண்ட் பகுதியில் மாகாண துணைநிலை ஆளுநர் பதிவிக்கு ஜனநாயாக கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

“அமெரிக்காவின் மாகாண ஆளுநராக முதல் இந்திய வம்சாவளி பெண் பதவி ஏற்பு” - யார் இந்த அருணா மில்லர் ?

கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அருணா மில்லர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவர் பதவி ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மேரிலேண்ட் மாகாணத்தின் துணை நிலை ஆளுநராக இந்தியர் ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

பதவி ஏற்றக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருணா மில்லர், துணை நிலை ஆளுநராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி. மேரிலேண்ட் என்னை பெருமை அடைய செய்துள்ளது. இந்த வெற்றி அனைவருக்குமானது எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories