உலகம்

ஊரில் இருந்து வெளியேறும் குழந்தைக்கு 6 லட்ச ரூபாய் தரப்படும்.. ஜப்பான் அரசின் அறிவிப்புக்கு காரணம் என்ன ?

டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து நகரத்தை விட்டு வெளியே அனுப்ப ஜப்பான் அரசு முடிவுசெய்துள்ளது.

ஊரில் இருந்து வெளியேறும் குழந்தைக்கு 6 லட்ச ரூபாய் தரப்படும்.. ஜப்பான் அரசின் அறிவிப்புக்கு காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அமைந்துள்ளது. அந்த நகரில் மட்டும் சுமார் 3 கோடியே 74 லட்சம் மக்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து அங்கு மக்கள் அதிக அளவில் குடியேறிவருகின்றனர்.

அதிக மக்கள் தொகை காரணமாக ஜப்பான் அரசால் மக்களுக்கு தேவையான குடிநீர், இருப்பிடம் போன்றவற்றை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நகரின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரில் இருந்து வெளியேறும் குழந்தைக்கு 6 லட்ச ரூபாய் தரப்படும்.. ஜப்பான் அரசின் அறிவிப்புக்கு காரணம் என்ன ?

இதன் காரணமாக டோக்கியோவில் மக்கள் தொகையை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக டோக்கியோவில் வசிக்கும் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து நகரத்தை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுக்கப்பட்டு அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி டோக்கியோவில் இருந்து வெளியேறி புறநகர் அல்லது கிராம பகுதிகளில் குடியேறும் மக்களுக்கு ஜப்பான் மதிப்பில் ஒரு குழந்தைக்கு சுமார் ஒரு மில்லியன் ஜப்பான் பணம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. அதன் இந்திய மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாயாகும்.

ஊரில் இருந்து வெளியேறும் குழந்தைக்கு 6 லட்ச ரூபாய் தரப்படும்.. ஜப்பான் அரசின் அறிவிப்புக்கு காரணம் என்ன ?

அதிலும் டோக்கியோவிலிருந்து வெளியேறிய புதிய வீட்டுக்கு சென்று அங்கு 5 ஆண்டுகள் வசிப்பவர் மட்டுமே இந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நகரில் இருந்து வெளியேறுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories